சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. திமுக அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி வேட்பாளரை களம் இறக்கி உள்ளது. அதன்படி, இ.வி.கே.எஸ்.இளங்கோவன் திமுக கட்சி கூட்டணி வேட்பாளராக களம் இறங்கியுள்ளார்.
unknown nodeஅதிமுகவை பொறுத்தவரையில், எடப்பாடி பழனிச்சாமி தரப்பு – ஓ.பன்னீர்செல்வம் தரப்பு என இரு பிரிவுகளாக இருக்கிறது. இரு பிரிவுகளும் தனித்தனியே செயல்பட்டு வரும் நிலையில், அதிமுக சார்பில் யார் போட்டியிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
unknown nodeஇதற்கிடையில், சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்தஆலோசனை கூட்டத்தில், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் ஆலோசனையில் கலந்து கொண்டுள்ளனர்.