‘எங்கள் முதல்வர் எங்கள் பெருமை’ என்ற தலைப்பில் அமைக்கப்பட்டுள்ள வரலாற்று புகைப்பட கண்காட்சியை, நேரில் பார்வையிட்ட திருமாவளவன்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரது 70வது பிறந்தநாளை முன்னிட்டு, திமுக சார்பில், சென்னை பாரிஸ் கார்னர் பகுதியில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் முதல்வர் மு.க.ஸ்டலின் அவர்களின் புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
எங்கள் முதல்வர் எங்கள் பெருமை – எனும் தலைப்பில் மு.க.ஸ்டாலின் அவர்களின் 70 ஆண்டுகால பயணம் பற்றிய புகைப்பட தொகுப்பு இந்த கண்காட்சியில் இடம் பெற்று இருந்தது.
எங்கள் முதல்வர் எங்கள் பெருமை
கடந்த 28-ஆம் தேதி புகைப்பட தொகுப்பு அடங்கிய கண்காட்சியை கமல்ஹாசன் தொடங்கி வைத்தார். இந்த நிலையில், தற்போது, விசிக தலைவர் திருமாவளவன் அவர்கள் ‘எங்கள் முதல்வர் எங்கள் பெருமை’ என்ற தலைப்பில் அமைக்கப்பட்டுள்ள வரலாற்று புகைப்பட கண்காட்சியை, நேரில் பார்வையிட்டார்.