இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் தரப்பில் வழக்கறிஞர்கள் மனு தாக்கல். டெல்லி சென்றுள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இன்று டெல்லியில் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளனர். பொதுக்குழு நேற்று நடைபெற்ற நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் சார்பில் மனு அளிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜூலை 11-ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டதற்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளதாக கூறப்படுகிறது. டெல்லி புறப்படுவதற்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், […]
அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்த சர்ச்சையால் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்பு என இரு அணிகளாக பிரிந்து,சலசலப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அதிமுக பொதுக்குழு கூட்டம் நேற்று பல்வேறு பிரச்சனைக்கு மத்தியில் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்,இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றனர்.அப்போது,ஓபிஎஸ் ஒப்புதல் தந்த 23 தீர்மானங்களையும் பொதுக்குழு நிராகரிப்பதாக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் ஆவேசமாக மேடையில் தெரிவித்தார். 2,190 பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்து: அதன்பின்னர்,அதிமுக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்படுவதாக […]
கடந்த தமிழ்நாடு சட்டமன்ற பட்ஜெட்(2022-23 ஆம் ஆண்டுக்கான) கூட்டத்தொடரின் போது,மாற்றுத்திறனாளி உலமாக்களுக்கு உலமா ஓய்வூதியம் வழங்குவதற்கான வயது 50-லிருந்து 40 ஆக குறைக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு விடுத்திருந்தார். இந்நிலையில்,மாற்றுத்திறனாளி உலமாக்களுக்கான ஓய்வூதியம் பெறும் வயது குறைக்கப்பட்டுள்ளது.அதன்படி,ஓய்வூதியம் பெறுவதற்கான வயது வரம்பு 50-ல் இருந்து 40-ஆக குறைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. முன்னதாக,மௌலவி,பேஷ் இமாம்,மோதினார்கள் உள்ளிட்ட உலமாக்களுக்கு உலமா ஓய்வூதியம் வழங்குவதற்கான ஆணைகள் பிறப்பிக்கப்பட்ட நிலையில்,தற்போது உலமாக்களுக்கு மாதம் ரூ.3000/- உலமா ஓய்வூதியம் […]
தமிழகத்தில் உள்ள அனைத்து பேருந்து ஓட்டுநர்கள்,இனி உரிய பேருந்து நிறுத்தங்களில் மட்டுமே பேருந்துகளை நிறுத்த வேண்டும் என போக்குவரத்துத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.குறிப்பாக,பேருந்து நிறுத்தத்தை தாண்டியோ,சாலையின் நடுவிலோ பேருந்தை நிறுத்தக் கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளது. மேலும்,பேருந்து நிறுத்தத்தை விட்டு பேருந்தை தள்ளி நிறுத்துவதால், பயணிகள் சிரமப்படுகிறார்கள் எனவும்,பேருந்து நிறுத்தத்தை தாண்டி நிறுத்தும்போது பயணிகள் ஓடிச்சென்று பேருந்தில் ஏற முயலும்போது பயணிகள் கீழே விழுந்து காயம் ஏற்படும் சூழ்நிலையும்,சில நேரங்களில் மரண தொடர்பான விபத்தும் ஏற்பட ஏதுவாகிறது எனவும் கூறி […]
இந்தியாவின் 15 வது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் அவர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு பதவியேற்ற நிலையில்,அவரின் பதவிக்காலம் வருகின்ற ஜூலை 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.இதனால்,அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18 ஆம் தேதி நடைபெறுவுள்ளது. இந்நிலையில்,குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு பாஜக சார்பில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்மு,குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுவை இன்று தாக்கல் செய்கிறார்.இதனால்,டெல்லி சென்றுள்ள அவர் பிரதமர் மற்றும் […]
இதுவும் கழக நிகழ்ச்சிதான். இதுபோன்ற திருமண நிகழ்வுகள்தான் கழகத்தின் ஒற்றுமையை, வலிமையை எடுத்துக்கூறும் தூதுவர்கள் என முதல்வர் ட்வீட். சென்னை திருவான்மியூரில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இல்ல திருமண விழா இன்று காலை நடந்தது. உடல்நலக்குறைவு காரணமாக சில நாட்கள் ஓய்வெடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், திருமண விழாவில் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தி பேசினார். இந்த நிகழ்வில் பேசிய அவர், இதுபோன்ற திருமண நிகழ்வுகள்தான் கழகத்தின் ஒற்றுமையை, வலிமையை எடுத்துக்கூறும் தூதுவர்கள்! என்று […]
உலமா ஓய்வூதியதாரர் இறந்த பிறகு அவரது நேரடி வாரிசுதாரருக்கு உலமா குடும்ப ஓய்வூதியம் வழங்க ஆணை பிறப்பித்த தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு. தமிழ்நாடு வக்பு வாரியம் சார்பில் உலமா ஓய்வூதியதாரர் இறந்த பிறகு அவரது நேரடி வாரிசுதாரருக்கு உலமா குடும்ப ஓய்வூதியம் வழங்க ஆணை பிறப்பித்த தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், ‘”உலமா ஓய்வூதியதாரர் இறந்த பிறகு, அவரது குடும்பம் வறுமையில் வாடாமல் இருப்பதற்கு, அக்குடும்பத்திற்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும்”. […]
பொய்யான வழக்குத் தொடுப்பதில் யார் சிறந்தவர் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் செல்வி மம்தா பானர்ஜி ஆகிய இருவருக்கும் கடுமையான போட்டி நிலவி வருகிறது என அண்ணாமலை ட்வீட். தனியார் பேருந்து உரிமையாளரை மிரட்டிய புகாரில் திமுக எம்.பி. திருச்சி சிவாவின் மகனும் பாஜக பிரமுகரான சூர்யாவை காவல்துறை கைது செய்துள்ளது. உளுந்தூர்பேட்டை அருகே தனியார் பேருந்து, தன் கார் மீது பேருந்து மோதிய சம்பவத்தில் இழப்பீடு கேட்டு பேருந்தை எடுத்துக்கொண்டு, உரிமையாளரை மிரட்டியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளதாக […]
அதிமுக பொதுக்குழு கூட்டம் முடிந்துள்ள நிலையில், ஓபிஎஸ் அணியினர் டெல்லி புறப்பட உள்ளதாக தகவல். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் அணியினர் இன்று இரவு டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் ஆணையம் மற்றும் உச்சநீதிமன்றத்தை அணுகுவது குறித்து ஆலோசித்து வருவதாகவும் தகவல் கூறப்படுகிறது. அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று பல்வேறு பிரச்சனைக்கு மத்தியில், பரபரப்பாக நடந்து முடிந்துள்ள நிலையில், ஓபிஎஸ் அணியினர் டெல்லி புறப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. இதில், மனோஜ் பாண்டியன் மற்றும் ஓபிஎஸ் […]
இந்த கண்ணீரில் இருந்து வெளிவரும் நிராகரிப்பு உணர்வு பிரதமரின் கர்வத்தை உடைக்கும் என ராகுல் காந்தி ட்வீட். மத்திய அரசு கொண்டுவந்த அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக பல்வேறு எதிர்ப்புகள் எழுந்து வரும் நிலையில், இளைஞர்கள் நாடு முழுவதும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இப்போராட்டம் வடமாநிலங்களில் தீவிரமடைந்துள்ள நிலையில், போராட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் தடியடி நடத்தி வருகின்றனர். ரயில்களுக்கு தீ வைப்பது மட்டுமல்லாமல், பாஜக தலைவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் சூறையாடப்பட்டுள்ளன. இந்த நிலையில், ராகில் காந்தி அவர்கள் தனது […]
அதிமுக பொதுக்குழுவுக்கு வந்திருந்த அக்கட்சியினர் என்னைச் சூழ்ந்துகொண்டு கைக் குலுக்கியது நெகிழ்வாயிருந்தது என திருமாவளவன் ட்வீட். அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டம் சென்னை வானகரத்தில் இன்று(வியாழக்கிழமை) நடைபெற்றது. இதையொட்டி, இன்று காலை முதலே வானகரம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்பட்டது. இந்த நிலையில், இதுகுறித்து திருமாவளவன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அம்மாவுக்கு உடல்நலம் சரியில்லை. வானகரம் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரைக் காண அதிகாலை புறப்பட்டு சென்றேன். வானகரம் அருகே போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டேன். அதிமுக […]
பாஜக தலைவர்கள் ஓபிஎஸ்,இபிஎஸ் இருவரையும் சந்திக்க வேண்டிய தேவை என்ன? நடப்பது அதிமுகவின் உள்கட்சி விவகாரம் அல்லவா? என ஜோதிமணி எம்.பி ட்வீட். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள், ஈபிஎஸ், ஓபிஎஸ்-ஐ தனித்தனியே சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரான திருமதி திரௌபதி முர்மு அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்யும் பொழுது கலந்துகொள்ளுமாறு தெரிவித்துள்ளனர். இந்த சந்திப்பின் போது, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, சி.டி.ரவி ஆகியோர் உடனிருந்தனர். இந்த […]
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள், ஈபிஎஸ், ஓபிஎஸ்-ஐ தனித்தனியே சந்தித்துள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள், ஈபிஎஸ், ஓபிஎஸ்-ஐ தனித்தனியே சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரான திருமதி திரௌபதி முர்மு அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்யும் பொழுது கலந்துகொள்ளுமாறு தெரிவித்துள்ளனர். இந்த சந்திப்பின் போது, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, சி.டி.ரவி ஆகியோர் உடனிருந்தனர்.
கடலூர் வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து அண்ணாமலை ட்வீட். கடலூர் மாவட்டம் எம்.புதூரில் வாண வெடிக்கை பட்டாசு தயாரிக்கும் ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தில், வெடிகள் வெடித்து சிதறி 3 பேர் உயிரிழந்த நிலையில், 2 பேர் படுகாயமடைந்துள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கடலூர் மாவட்டம் எம்.புதூர் பகுதியில் பட்டாசு ஆலையில் வெடி […]
பொதுக்குழுவில் இன்று கத்தியவர்கள் உறுப்பினர்களே இல்லை, கூலிக்கு அழைத்துவரப்பட்டவர்கள் என வைத்திலிங்கம் பேட்டி. சென்னை வானகரத்தில் ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் பரபரப்பாக நடைபெற்று நிறைவு பெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று, அவர்களது ஆதரவாளர்களுடன் எதிரும் புதிருமாக அமர்ந்திருந்தனர். அப்போது, ஓபிஎஸ் ஒப்புதல் தந்த 23 தீர்மானங்களையும் பொதுக்குழு நிராகரிப்பதாக சிவி சண்முகம் ஆவேசமாக தெரிவித்தார். அடுத்த பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமையுடன், அனைத்து தீர்மானங்களும் […]
கடலூர் பட்டாசு ஆலை விபத்தில், உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் எம்.புதூரில் வாண வெடிக்கை பட்டாசு தயாரிக்கும் ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தில், வெடிகள் வெடித்து சிதறி 3 பேர் உயிரிழந்த நிலையில், 2 பேர் படுகாயமடைந்துள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள […]
கடலூர் மாவட்டம், எம். புதூர் பகுதியில் ஏற்பட்ட பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து ஓபிஎஸ் அறிக்கை. கடலூர் மாவட்டம் எம்.புதூரில் வாண வெடிக்கை பட்டாசு தயாரிக்கும் ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தில், வெடிகள் வெடித்து சிதறி 3 பேர் உயிரிழந்த நிலையில், 2 பேர் படுகாயமடைந்துள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த அவர்கள் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.அந்த […]
பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து அன்புமணி ராமதாஸ் ட்வீட் செய்துள்ளார். கடலூர் மாவட்டம் எம்.புதூரில் வாண வெடிக்கை பட்டாசு தயாரிக்கும் ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தில், வெடிகள் வெடித்து உடல் சிதறி 3 பேர் உயிரிழந்த நிலையில், 2 பேர் படுகாயமடைந்துள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து அன்புமணி ராமதாஸ் ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் […]
300 ஆண்டுகள் பாரம்பரியமிக்க புதுக்கோட்டை சமஸ்தானத்தின் 9-ஆவது மன்னரான ராஜகோபால தொண்டைமான் அவர்களின் 100-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.இதனால்,புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள மன்னரின் திருவுருவச்சிலைக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிலையில்,புதுக்கோட்டை மன்னர் ராஜகோபால தொண்டைமான் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் நினைவு மணிமண்டபம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக,தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் முதல்வர் […]
சென்னை வானகரத்தில் ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் தொடங்கி பரபரப்பாக நடைபெற்றது.இந்த கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்,இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றனர்.அப்போது,ஓபிஎஸ் ஒப்புதல் தந்த 23 தீர்மானங்களையும் பொதுக்குழு நிராகரிப்பதாக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் ஆவேசமாக மேடையில் தெரிவித்தார். அதன்பின்னர்,அதிமுக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்படுவதாக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.இதனைத் தொடர்ந்து,ஒற்றைத் தலைமை வேண்டும் என்று 2,190 பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்டு அவைத்தலைவருக்கு கடிதம் எழுதிய […]