அரசியல்

#Breaking : டிடிவி தினகரனுடன் ஓபிஎஸ் சந்திப்பு..!

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் டிடிவி.தினகரனை சந்தித்தார் ஓ.பன்னீர்செல்வம். அதிமுகவில் சமீப காலமாக தொடர்ந்து பிரச்சினைகள் நீடித்து வரும் நிலையில், தற்போது பரபரப்பான அரசியல் சூழல் மத்தியில் டிடிவி தினகரனுடன் ஓபிஎஸ் சந்திப்பு மேற்கொண்டுள்ளார். சசிகலா, டிடிவி தினகரனுடன் ஏற்கனவே இணைந்து செயல்பட தயார் என்று ஓபிஎஸ் அறிவித்திருந்த நிலையில், தற்போது டிடிவி தினகரனை சந்தித்துள்ளார். ஓபிஎஸ்-ஐ வாசல் வரை வந்து டிடிவி தினகரன் வரவேற்று அழைத்துச் சென்றார்.  இந்த சந்திப்பின்போது ஓபிஎஸ் உடன் பன்ருட்டி ராமச்சந்திரனும் உடன் […]

2 Min Read
O Panneerselvam

#BIGBREAKING: டிடிவி தினகரனை சந்திக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்.!

அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரனும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் இன்னும் சற்று நேரத்தில் சந்திக்க இருக்கின்றனர். சென்ன அடையாறில் உள்ள டிடிவி தினகரன் இல்லத்தில் மாலை 7 மணிக்கு சந்திப்பு நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. ஓ.பன்னீர்செல்வத்துடன் பண்ருட்டி ராமச்சந்திரனும் செல்கிறார். இன்று நடைபெறும் சந்திப்பில் இணைந்து செயல்படுவது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தலாம் என தகவல் வெளியாகியுள்ளது.  ஏற்கனவ, டிடிவி தினகரன், சசிகலாவுடன் இணைந்து செயல்படத் தயார் என்று ஓ.பன்னீர்செல்வம் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருந்தார் […]

2 Min Read
O. Panneerselvam - TTV Dhinakaran

இறுதிகட்டத்தை நோக்கி கர்நாடக தேர்தல்… இன்று மாலையுடன் ஓய்கிறது பிரச்சாரம்.!

இன்று மாலையுடன் கர்நாடக மாநில தேர்தல் பிரச்சாரம் நிறைவடைகிறது.  நாளை மறுநாள் இந்திய அரசியல் களமே உற்றுநோக்கும் மிக முக்கிய தேர்தலாக கர்நாடக சட்டமன்ற தேர்தல் அமைய உள்ளது. மொத்தமுள்ள 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் மே 10 (வரும் புதன்கிழமை) நடைபெறவுள்ளது. அடுத்த வருடம் 2024இல் நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ளதால் இந்த தேர்தலை பாஜக – காங்கிரஸ் ‘நாடாளுமன்ற தேர்தல் ஒத்திகை’ போல எண்ணதொடங்கிவிட்டனர் . இதனால் அங்கு பிரச்சாரமானது வழக்கத்தை விட அதிக […]

5 Min Read
PM Modi and Rahul Gandhi

குழந்தை திருமணத்தை ஆதரிக்கும் ஆளுநர்.? முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்.! 

குழந்தை திருமணத்தை ஆளுநர் ரவி ஆதரிக்கிறாரா.? என முதல்வர் மு.க.ஸ்டாலின் என நேற்று பொதுக்கூட்டத்தில் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.  திமுக ஆட்சியின் 2 ஆண்டுகால நிறைவை அடுத்து அதனை கொண்டாடும் வகையில் சென்னை , பல்லாவரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் , டி.ஆர்.பாலு , தாமோ.அன்பரசன் என பல முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி அண்மையில் கூறிய, காலாவதியான திராவிட மாடல், சிதம்பரம் தீட்சிதர்கள் விவகாரம் […]

4 Min Read
MK Stalin

மஞ்சள் விவகாரம் : காங்கிரஸ் என்னை அவமதிக்கவில்லை.! பிரதமர் மோடி பேச்சு.!

மஞ்சள் விவகாரத்தில் காங்கிரஸ் என்னை அவமதிக்கவில்லை. மஞ்சள் விவசாயிகளை அவமதித்தனர் என பிரதமர் மோடி பேசியுள்ளார். கர்நாடகாவில் இன்று தேர்தல் பிரச்சாரம் இறுதி நாள் என்பதால், இறுதிக்கட்ட பிரச்சத்தில் பிரதான கட்சி தலைவர்கள் வெகு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பிரதமர் மோடி நேற்று மைசூரு மாவட்டம் நஞ்சன்குட் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அங்கு மஞ்சள் விவசாயிகள் முன்பு பேசிய பிரதமர், கொரோனா தொற்று காலத்தில் மஞ்சள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என கூறினேன். ஆனால் […]

2 Min Read

சனாதனத்தை காலாவதியாக்கியது திராவிட மாடல் தான்…சாதனை பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு.!

ஆரியத்தை வீழ்த்தும் சக்தியாக திராவிடம் இருப்பதால் ஆளுநர் பயப்படுகிறார் என முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார். மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் 2 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டம் இன்று தொடங்கி மூன்று நாட்கள் திமுக தலைமையில் நடைபெறுகிறது. இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், திராவிட மாடல் ஆட்சியின் சாதனை குறித்து பேசினார். அப்போது பேசிய முதல்வர் திராவிடம் என்பது காலாவதியான கொள்கையல்ல, சனாதனத்தை காலாவதியாக்கியது திராவிட மாடல் தான் என ஆளுநரின் கருத்துக்கு பதிலளிக்கும் விதமாககூறினார். […]

3 Min Read
TNCM MkStalin gov

ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேச்சு வேடிக்கையாக இருக்கிறது…தொல் திருமாவளவன் பேட்டி.!!

ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேசியது என்னால்  புரிந்து கொள்ள முடியவில்லை, வேடிக்கையாக இருக்கிறது என தொல் திருமாவளவன் கூறியுள்ளார்.  மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கூறும்போது ” புதுச்சேரியில் இயங்கி வரும் ஜிப்மர் மருத்துவமனையில் பல்வேறு மருத்துவ வசதிகள் மாற்றப்பட்டது குறித்து தனியாரிடம் தாரைவாக்க முயற்சிக்கிறார்களோ என்ற ஐயம் எழுந்துள்ளது. இந்த கட்டணம் வசூலிக்கும் முறையை கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இந்த ஜிப்மர் மருத்துவமனையில் புதுச்சேரியில் மட்டுமில்லாமல் தமிழ் […]

4 Min Read
thol. thirumavalavan and tamilisai soundararajan

ஆல் இந்தியா ரேடியோ இனி ஆகாஷ்வாணி.! கடும் எதிர்ப்பு தெரிவித்து டி.ஆர்.பாலு கடிதம்…

அகில இந்திய வானொலியை “ஆகாஷ்வாணி” என்று இந்தியில் மட்டும் பயன்படுத்தும் உத்தரவுக்கு திமுக கடும் எதிர்ப்பு. அகில இந்திய வானொலி (All India Radio) என்பதற்கு பதிலாக ‘ஆகாஷ்வாணி’ என இந்தியில் பயன்படுத்த தொடங்கியதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் ஒன்றிய அமைச்சர் அனுராக் தாகூருக்கு திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில்,  ஆல் இந்தியா ரேடியோ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, அதற்குப் பதிலாக ஆகாஷ்வானி என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது நியாயமற்றது. […]

2 Min Read
TRBaalu

வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்து இந்த ஆட்சி -முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு.!

சென்னை: மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடம் மற்றும் கலைஞர் நினைவிடத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். திமுக தலைமையிலான அரசு தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த 2 ஆண்டு நிறைவடைந்து, இன்று மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதனை முன்னிட்டு நினைவிடங்களில் CM மரியாதை செலுத்தியபோது, அமைச்சர்கள், எம்.பி.,க்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர். அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் மரியாதை செலுத்தியபின் செய்தியாளர்கள் சந்தித்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்த ஆட்சி […]

3 Min Read
MK Stalin

திமுக அரசின் 2 ஆண்டு சாதனை… மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று பொதுக்கூட்டம்.!

மு.க.ஸ்டாலின் தலைமையில் 2 ஆண்டு ஆட்சி விளக்கும் பொதுக்கூட்டம் இன்று நடைபெறுகிறது. திமுக பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடையுவுள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், மே 7,8, மற்றும் 9 ஆகிய மூன்று நாட்களில் திராவிட அரசின் இரண்டு ஆண்டுகள் சாதனைகளை விளக்கும் பொதுக்கூட்டம் நடைபெறும் என திமுக தலைமை அறிவித்துள்ளது. அதன்படி, இரண்டு ஆண்டுகள் சாதனைகளை விளக்கும் வகையில் அறிவிக்கப்பட்ட தேதியின் படி, 7ம் தேதி ஆன இன்று பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. ஆனால், […]

3 Min Read
MKStalin CM

கர்நாடக சட்டசபை தேர்தல்: பெங்களூருவில் இரண்டு நாள் பிரதமர் மோடி மெகா சாலைப்பேரணி.!

கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரத்தின் மெகா சாலைப் பேரணியை பிரதமர் மோடி இன்று பெங்களுருவில் நடத்துகிறார். கர்நாடக சட்டப்பேரவைதேர்தல் நெருங்கிவரும் வேளையில் தேர்தல் பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. மாநிலத்தில் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளும் நோக்கில் பாஜகவும், இந்த முறை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கவேண்டும் என காங்கிரசும் பலத்த போட்டியில் ஈடுபட்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர். மே 10-ம் தேதி நடைபெறும் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 13இல் நடைபெறும் என […]

4 Min Read
PM ModiRoadshow

அயோத்தி கோயில்.! ராமர் பக்தர்கள் கனவை பிரதமர் மோடி நிறைவேற்றினார்.! கர்நாடகாவில் அமித்ஷா பேச்சு.!

அயோத்தியில் ராமர் கோயில் கட்டியதன் மூலம் ராமர் பக்தர்களின் கனவை பிரதமர் மோடி நிறைவேற்றினார் என கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு.  கர்நாடகாவில்  சட்டமன்ற தேர்தல் இன்னும் ஒரு சில நாட்களில் (மே 10) வரவுள்ள நிலையில் இறுதி கட்ட பிரச்சாரத்தில் பிரதான கட்சி தலைவர்கள் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கர்நாடக தேர்தல் களம் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் இதற்கு முன்னர் செய்த பணிகள், செய்ய போகும் வாக்குறுதிகள், […]

3 Min Read
Amit Shah

திராவிட மாடல் என்று எதுவும் இல்லை.! முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கடும் விமர்சனம்.!

திராவிட மாடல் என்று ஒன்று இல்லை என முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார்.  இன்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரை சித்திரை திருவிழா நடவடிக்கைகளை பற்றி பல்வேறு விமர்சனங்களைமுன் வைத்தார். அவர் கூறுகையில், திராவிட மாடல் என்று எதுவும் இல்லை. ஏழைகளுக்கு பாதுகாப்பில்லாத தன்மையே திராவிட மாடல் என கூறுகிறார்கள் என்று விமர்சித்தார். மேலும், மதுரை சித்திரை திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. அதனை காண லட்சக்கணக்கான மக்கள் திரண்டு […]

3 Min Read
Sellur raju

சிதம்பரம் தீட்சிதர்கள் மீது சட்டம் பாயக்கூடாதா.? ஆளுநர் கருத்துக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி.!

ஆளுநர் என்ன ஆண்டவரா.? இது மக்களால் தேர்தெடுக்கப்பட்ட ஆட்சி மக்களுக்கு நல்லது செய்வதே எங்கள் வேலை என அமைச்சர் சேகர் பாபு இன்று செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்தார். தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று செய்தியாளர்களை சந்தித்து ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்த பல்வேறு கேள்விகளுக்கும், அறநிலையத்துறை செயல்பாடுகள் குறித்தும் பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டு பேசினார். அவர் கூறுகையில், ஆளுநர் தமிழகத்தில் 50 ஆயிரம் ஏக்கர்  கோவில் சொத்துக்கள் ஆக்கிரமிப்பட்டுள்ளதாக கூறுகிறார். அது கடந்த 10 ஆண்டுகளாக இருந்து […]

5 Min Read
sekarbabu

தமிழ்நாடு அரசின் 2 ஆண்டு சாதனை மலர்… முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிடுகிறார்.!

தமிழக அரசின் இரண்டு ஆண்டு சாதனை மலரை இன்று முதல்வர் ஸ்டாலின் வெளியிடுகிறார். தமிழக அரசு கடந்த இரன்டு ஆண்டில் திமுக ஆட்சியின் கீழ் அடைந்த சாதனைகளை விளக்கும் சாதனை மலரை, முதலமைச்சர் ஸ்டாலின் இன்று வெளியிடுகிறார். முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி என்ற தமிழக அரசின் சாதனை மலர்,செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை சார்பில் இன்று முதல்வர் ஸ்டாலின் அவர்களால் வெளியிடப்படுகிறது. தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் அறிவித்த […]

3 Min Read
MKStalin CM

எந்த அரசு பேருந்தும் நிறுத்தப்படவில்லை – இபிஎஸ்-க்கு அமைச்சர் சிவசங்கர் பதிலடி.!

திமுக ஆட்சிக்கு வந்த பின் ஒரு அரசு பேருந்தையும் நிறுத்தவில்லை என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சிக்கு வந்த இரண்டு ஆண்டுகளாக எந்தவொரு அரசுப் பேருந்தும் நிறுத்தப்படவில்லை எனவும், எடப்பாடி பழனிசாமி வீணாக பொய் அறிக்கை பரப்பவேண்டும் எனவும் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். நகரப்பேருந்துகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டிய நிலையில் அமைச்சர் சிவசங்கர் பதில் கொடுத்துள்ளார். மகளிர் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ள இரண்டு ஆண்டுகள் முறையே 1,216 கோடி மற்றும் 2,546 […]

4 Min Read
Sivasankar TNSTC

கேரளா: முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி மருத்துவமனையில் அனுமதி.!

கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி திடீர் உடல் நிலையில் சரியில்லா காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கேரளாவில் இரண்டு முறை முதல்வராக பதவி வகித்த முன்னாள் முதல்வவரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான உம்மன் சாண்டி, வைரஸ் நிமோனியா காய்ச்சல் காரணமாக கோட்டயம் மாவட்ட தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது மகன் சாண்டி உம்மன் தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவரது மகன், “அப்பா வைரஸ் நிமோனியாவால் அவதி படுவதால் மருத்துவமனையில் இருக்கிறார். இப்போது, அவரை பார்ப்பதற்கு பார்வையாளர்களுக்கு […]

2 Min Read
Kerala CM Oommen Chandy

மீண்டும் அம்மா ஆட்சி தமிழகத்தில் வரும்.! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி.!

மீண்டும் அம்மா ஆட்சி தமிழகத்தில் வரும் என முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்துள்ளார். சென்னையின் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் திமுக அரசு மீது பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்தார். அவர் கூறுகையில், தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டத்தால்,  சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து உள்ளதாக குறிப்பிட்டார். முதல்வர் மு.க.ஸ்டாலின் விழிப்போடு இருந்து இதனை கண்காணிக்க வேண்டும் என கூறினார். தமிழகத்தில் வியாபாரி ஒருவர் கஞ்சா போதை ஆசாமிகள் தொல்லை தாங்க முடியாமல், தன் கடையை […]

3 Min Read
Jayakumar ADMK

உயர்கல்வி குறித்து ஆளுநர் கூறுவது தவறான தகவல்.! அமைச்சர் பொன்முடி தகவல்.! 

ஆளுநர் ரவி தவறான தகவல்களை கூறி வருகிறார் என அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களிடம் பேட்டியளித்துள்ளார்.  தமிழக ஆளுநர் அண்மையில் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தமிழ்நாட்டில் செயல்படும் சென்னை பல்கலைகழகத்தின் கல்வி தரம் குறைந்து விட்டதாகவும், அதனால் 10வது இடத்தில் இருந்த சென்னை பல்கலைக்கழகம் தற்போது 100வது இடம் வரை சென்றதாக குறிப்பிட்டு இருந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்து இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆளுநர் கூற்றுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் […]

4 Min Read
Ponmudi

பித்தம் தெளிய சித்த மருத்துவத்தில் மருந்துண்டு ஆளுநரே.! சு.வெங்கடேசன் டிவிட்டரில் கடும் விமர்சனம்.!

சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதா நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பது குறித்து மதுரை எம்பி சு.வெங்கடேசன் டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.  அண்மையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்து இருந்தார். அதில், திராவிட மாடல் காலாவதியான ஐடியா, சித்த மருத்துவ கல்லூரி பல்கலைக்கழக மசோதா நிறுத்திவைப்பு, சிதம்பரம் தீட்சிதர்கள் விவகாரம் என பல்வேறு விவகாரங்கள் குறித்து தனது கருத்தை வெளியிட்டு இருந்தார். இந்த கருத்துக்கள் தமிழக  அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை உண்டு செய்து வருகின்றன. […]

5 Min Read
SU VENKATESAN