பழனிசாமிதான் இனி அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் – தமிழ் மகன் உசேன்

இயக்கம் உழைப்பவர்களிடம் இருக்க வேண்டும் என்பதற்கான தீர்ப்பை நீதிமன்றம் முடிவு செய்துள்ளது என தமிழ் மகன் உசேன் பேட்டி.

இயக்கம் உழைப்பவர்களிடம் இருக்க வேண்டும் என்பதற்கான தீர்ப்பை நீதிமன்றம் முடிவு செய்துள்ளது என தமிழ் மகன் உசேன் பேட்டி.

அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா சிலைக்கு கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

தமிழ் மகன் உசேன் பேட்டி

unknown node

இந்த  நிகழ்வின் போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றத்தின்  வரவேற்கத்தக்க தீர்ப்பு. அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. பொதுச்செயலாளருக்கான தேர்தல் குறித்து தலைமை கழகம் முடிவு செய்யும்.

இ.பி.எஸ். நிரந்தர பொதுச்செயலாளர்தான்

இ.பி.எஸ். நிரந்தர பொதுச்செயலாளர்தான். விரைவில் நீங்கள்  பார்க்கப்போகிறீர்கள். இயக்கம் உழைப்பவர்களிடம் இருக்க வேண்டும் என்பதற்கான தீர்ப்பை நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. சட்டரீதியாக வெளியேற்றப்பட்டவர்களை மீண்டும் ஒருங்கிணைப்பது பற்றி தலைமை தான் முடிவு செய்யும் என தெரிவித்துள்ளார்.