7 பேரையும் விடுதலை செய்யவேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு -ஓ.பன்னீர் செல்வம் ட்வீட்

Panneerselvam has said that it was the government that passed the resolution in the assembly to release all 7 from jail.

7 பேரையும் சிறையிலிருந்து விடுவிக்க சட்டப்பேரவையில்  தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு பரிந்துரைத்தது அரசு தான் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன், உள்ளிட்ட 7 பேர் 1991-ஆம் ஆண்டு முதல் சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர். 7 பேரை முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழக அமைச்சரவையில் கடந்த 2018-ஆம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .ஆனால் இந்த தீர்மானத்துக்கு தமிழக ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை.ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது.

இதற்கு இடையில்  உச்சநீதிமன்றத்தில் தன்னை விடுதலை செய்ய கோரி பேரறிவாளன் வழக்கு தொடர்ந்தார்.பேரறிவாளன் விடுதலை குறித்து முடிவெடுக்க ஆளுநருக்கு ஒரு வாரம் அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும் பேரறிவாளனை விடுதலை செய்வது தொடர்பான வழக்கு 2 வாரங்களுக்குப் பிறகு விசாரணை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் சிறையிலிருந்து விடுவிக்க சட்டப்பேரவையில் முதலில் அறிவித்ததும், அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி மேதகு ஆளுநருக்கு பரிந்துரைத்ததும் மாண்புமிகு அம்மா அவர்களும், அம்மாவின் அரசும் தான்.

7 பேரையும் விடுதலை செய்யவேண்டும் என்பதே அம்மா அரசின் உறுதியான நிலைப்பாடு.விரைவில் நல்ல தீர்வு வரும் என எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

unknown node