பராசக்தி ஹீரோ! தலைவர் கலைஞரின் உயிரனைய நண்பர்! – முதல்வர் ட்வீட்

கலை உள்ள வரை நடிகர் திலகத்தின் புகழ் இம்மண்ணில் நிலைத்து நிற்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட்.

கலை உள்ள வரை நடிகர் திலகத்தின் புகழ் இம்மண்ணில் நிலைத்து நிற்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 95-வது பிறந்தநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து,எ அவரது உருவப்படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இந்த நிலையில், இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், பராசக்தி ஹீரோ! தலைவர் கலைஞரின் உயிரனைய நண்பர்! பேரறிஞர் அண்ணா எழுதிய நாடகத்தில் நடித்து, தந்தை பெரியாரால் ‘சிவாஜி’ என்ற பட்டம் பெற்று, வரலாற்றில் நிலைத்துள்ளவர்! கலை உள்ள வரை நடிகர் திலகத்தின் புகழ் இம்மண்ணில் நிலைத்து நிற்கும்!’ என தெரிவித்துள்ளார்.

unknown node
பராசக்தி ஹீரோ! தலைவர் கலைஞரின் உயிரனைய நண்பர்! – முதல்வர் ட்வீட்