கல்விக்கும், விளையாட்டிற்கு நம் தமிழ்நாடு அரசு முக்கியத்துவம் அளிப்பதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கள ஆய்வில் முதலமைச்சர் என்று திட்டத்தின் பகுதியாக நேற்று மதுரையில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார், தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் பணிகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைமுறைப்படுத்துவதை முதல்வர் நேரடியாக சென்று ஆய்வு செய்து வருகிறார். இதன்படி தமிழ்நாடு விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் நலன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் அந்த திட்டத்தின் பகுதியாக மதுரையிலுள்ள பல்வேறு ஆய்வுப்பணிகளை மேற்கொண்டார்.
இதேபோல் மதுரை லேடி டோக் கல்லூரியில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு கவுரவிக்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறும்போது, தமிழ்நாட்டிற்கும் இந்த கல்லூரிக்கும் விருதுகள் வாங்கி பெருமை சேர்த்த பேட்மின்டன் வீராங்கனை ஜெர்லின் அனிகா, ஒலிம்பிக் வீராங்கனை ரேவதி, போல் வால்ட் தேசிய சாம்பியன் ரோஸி மீனா ஆகியோர் மற்றும் பயிற்சியாளரையும் பாராட்டி கவுரவித்தார்.
கல்லூரிக்கும் மாணவிகளுக்கும் பாராட்டு தெரிவித்த அவர், நம் தமிழக அரசு கல்விக்கு முக்கியத்துவம் அளிப்பது போல் விளையாட்டுக்கும் முக்கியத்துவம் அளித்துவருகிறது, இதனால் பெற்றோர்கள் அச்சப்படத் தேவையில்லை, விளையாட்டில் இருந்தால் கல்விக்கும் பொருளாதாரத்திற்கும் சிக்கல் ஏற்படுமோ என்று பயம் கொள்ளாமல் குழந்தைகளை நம்பி விளையாட்டிலும் ஈடுபட அனுப்ப வேண்டும் என்று கூறியுள்ளார்.