ஜூலை 19-ல் நாடாளுமன்ற கூட்டத்தொடர்..!

It has been announced that the first parliamentary monsoon session will be held on July 19.

ஜூலை 19ஆம் தேதி முதல் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு கொரோனா காரணமாக ஜூலை மாதம் கூட நடைபெறவேண்டிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் காலதாமதாக செப்டம்பர் மாதம் நடைபெற்றது. 18 நாட்கள் நடைபெற வேண்டிய கூட்டத்தொடர்  11 நாட்கள் மட்டுமே நடந்தது.

பின்னர், டிசம்பர் மாதம் நடைபெறவேண்டிய குளிர்கால கூட்டத்தொடர் பல்வேறு காரணங்களுக்காக நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இந்த ஆண்டுக்கான முதல் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த பிப்ரவரி மாதம் நடைப்பெற்றது.

இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 19 ஆம் தேதியில் இருந்து ஆகஸ்ட் 13 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.