பொதுமக்‍கள் சசிகலாவை ஜெயலலிதாவின் மறு உருவமாக பார்க்கின்றனர் – கருணாஸ்..!

Karunas MLA sees Sasikala as a re-enactment of Jayalalithaa by the public.

சசிகலாவை ஜெயலலிதாவின் மறு உருவமாக பார்க்‍கும் பொதுமக்‍கள் பார்க்கிறார்கள் கருணாஸ் எம்எல்ஏ.

ராமநாதபுரம் மாவட்டத்தை சார்ந்த திருவாடானையில் செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ், சசிகலா வருகையின்போது அதிமுக தொண்டர்கள் மட்டுமன்றி ஏராளமான பொதுமக்கள் அவரை வரவேற்றார்கள் என தெரிவித்தார்.

யாரும் எதிர்பார்க்காத அளவிலே சாதி, மதம் கடந்து அதிமுக தொண்டர்கள் மட்டுமன்றி பொதுமக்கள் அனைவரும் அரவரதத்துடன் வரவேற்றனர். 30 ஆண்டுகளுக்கு மேலாகவே ஜெயலலிதா உடன் பயணித்தது மட்டமல்லாமல், அரசியல் துறையில் அவரின் நிழலாக இருந்தார்.

அதிமுக தொண்டர்கள் அவரை நேசிக்கிறார்கள். அவரை ஜெயலலிதாவிற்கு பின்னர் அரசியல் ரீதியாக ஒரு ஆளுமை மிக்க தலைவராக இருந்த ஜெயலலிதாவின் நிழலாக,  ஜெயலலிதாவின் மறு உருவமாக பொது மக்கள் பார்கிறார்கள் என தெரிவித்தார்.