பாஜக மட்டும் தான் சமூக நீதிக்காகவே வாழும் கட்சியாக திகழ்கிறது என பிரதமர் மோடி பேச்சு.
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று கட்சி தொண்டர்களிடம் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், பாஜக மட்டும் தான் சமூக நீதிக்காகவே வாழும் கட்சியாக திகழ்கிறது. கடந்த பல ஆண்டுகளாக சமூக நீதி என்ற பெயரில் பல அரசியல் கட்சிகள் அரசு அரசியல் செய்து வந்தன.
குடும்ப நலத்திற்காக மட்டும் உழைப்பவர்கள் சமூக நீதி பற்றி பேசுகிறார்கள் ஆனால் மக்களுக்காக பாகுபாடு இன்றி பாடுபடும் கட்சி பாஜக. அனைவருக்குமான வளர்ச்சி என்பது தான் பாஜகவின் முக்கிய கொள்கை. தேசம் தான் முதன்மையானது என்பதுதான் பாஜகவின் உச்சபட்ச சித்தாந்தம்.
மோடி ஆட்சிக்கு முடிவு காலம் நொறுங்கிவிட்டது என கூறுகிறார்கள், பாஜகவுக்கு எதிராக தொடர்ந்து சதித்திட்டம் தீட்டுகிறார்கள். ஆனால் ‘தாமரையை’ காப்பது ஏழை, தலித் மற்றும் பழங்குடியின மக்கள் தான் என்பது அவர்களுக்கு தெரியவில்லை என தெரிவித்திருந்தார்.