கிசான் திட்டத்தில் முறைகேடு... புகார் அளிக்க பல்வேறு இணைய முகவரிகளை அளித்த காவல்துறை...

பிரதமர் மோடி அவர்களால் தொடங்கப்பட்ட கிசான் திட்டத்தில் பல்வேறு முறைகேடு தொடர்பாக புகார் அளிக்க, தொலைபேசி, பேக்ஸ், வாட்ஸ் அப் மற்றும் இமெயில் முகவரியை தமிழக

பிரதமர் மோடி அவர்களால் தொடங்கப்பட்ட கிசான் திட்டத்தில் பல்வேறு முறைகேடு தொடர்பாக புகார் அளிக்க, தொலைபேசி, பேக்ஸ், வாட்ஸ் அப் மற்றும் இமெயில் முகவரியை தமிழக சிபிசிஐடி காவல்துறையினர்  வெளியிட்டுள்ளனர்.

தொலைபேசி : 044 2851 3500

பேக்ஸ் : 044 2851 2510

வாட்ஸ் அப் : 94981 81035

இமெயில் : [email protected]

பிரதான்  மந்திரி கிசான் யோஜனா என்னும்  நிதி உதவி திட்டத்தின் கீழ், சிறு, குறு விவசாயிகளுக்கு, மூன்று முறை வீதம்  ஆண்டுக்கு, 6,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் தமிழகத்திலும் விவசாயிகள் பயனடைந்து வரும் நிலையில், பல்வேறு முறைகேடு நடந்துள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஆயிரக்கணக்கானோர் விவசாயிகள் என்ற பெயரில் முறைகேடாக பணம்பெற்று வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து சிபிசிஐடி காவல்துறையினர்  விசாரணை நடத்தி, முறைகேட்டில் ஈடுபட்டவர்களை கைது செய்து வருகின்றனர். முறைகேட்டில் ஈடுபட்டவர்களிடம் இருந்து பணம் திரும்ப பெற்று வருகிறது. இந்நிலையில் கிசான் திட்ட முறைகேடு குறித்து புகார் அளிக்க, தொலைபேசி, வாட்ஸ்அப் எண்களை தற்போது சிபிசிஐடி காவல்துறையினர் அளித்துள்ளனர்.