எனக்குதான் எல்லாம் தெரியும் என்பதுபோல நாம் இருக்கக் கூடாது என ராகுல்காந்தி பேச்சு.
அமெரிக்காவின் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இந்திய ஒற்றுமை யாத்திரையை தடுக்க மத்திய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டது; ஆனால் அவையெல்லாம் என்னை முன்னோக்கி செல்லவே வைத்தது.
ஒருவேளை உங்களுக்கு கோபம், வெறுப்பு, கர்வம் ஆகியவற்றின் மீது நம்பிக்கை இருந்திருந்தால், நீங்கள் பாஜக கூட்டத்தில் இருந்திருப்பீர்கள். இன்று இந்தியாவில் ஏழைகளும் சிறுபான்மையினரும் உதவியற்று நிற்கின்றனர். இந்தியர்கள் எப்போதும் ஒருவரையொருவர் வெறுப்பதை விரும்ப மாட்டார்கள்; ஊடகங்கள் மற்றும் மக்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒரு சிறிய கூட்டம்தான், வெறுப்பை பரப்பிவிடுகிறது.
நீங்கள் எப்படி தாக்கப்படுவதாக உணர்கின்றீர்களோ, அப்படித்தான் சீக்கியர்கள், கிறிஸ்துவர்கள், தலித்துகள், பழங்குடியினரும் உணர்கிறார்கள்1980-களில் தலித்துகளுக்கு என்ன நடந்ததோ, அதுவே இன்று இந்தியாவில் முஸ்லீம்களுக்கு நடக்கிறது.
எனக்குதான் எல்லாம் தெரியும் என்பதுபோல நாம் இருக்கக் கூடாது” என்று பல சிந்தனையாளர்கள் கூறியுள்ளனர்; ஆனால், இந்தியாவில் சிலர் அப்படி உள்ளனர்; பிரதமர் மோடியும் அப்படிப்பட்ட ஒருவர்தான். கடவுள் வந்து பிரதமர் பக்கத்தில் உட்கார்ந்தால், ‘பிரபஞ்சம் எப்படி செயல்படுகிறது’ என கடவுளிடம் விளக்கத் தொடங்கிவிடுவார் பிரதமர்; ‘நாம் என்ன உருவாக்கி வைத்துளோம்’ என கடவுளே யோசிப்பார் என விமர்சித்துள்ளார்.
