ரஜினி ரசிகர்களின் போராட்டத்திற்கு போலீஸ் அனுமதி..!

Police have given permission for a protest by Rajinikanth fans in Chennai Valluvar Kottam tomorrow under the name "Spiritual Political Call".

சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவது இல்லை என்று அறிவித்தார். இவரின் அறிவிப்பு ரஜினி ரசிகர்கள் சிலர் இந்த முடிவை வரவேற்றுள்ள நிலையில், சிலர் ரஜினிகாந்த் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தொடர்ந்து கூறி வருகிறார்கள்.

இதைத்தொடர்ந்து, சமூக வலை தளங்களில் ரஜினி ரசிகர்கள், ரஜினியை அரசியலுக்கு அழைத்து தொடர்ந்து பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், ரஜினி ரசிகர்கள் தங்களது பலத்தை காட்ட முடிவு செய்தனர். அதன்படி சென்னையில் நாளை அனைத்து ரசிகர்களும் ஒன்று திரண்டு ரஜினியை அரசியலுக்கு அழைப்பது என்று முடிவு எடுக்கப்பட்டது.

இதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து ரஜினி ரசிகர்கள் சென்னை வரஉள்ளனர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வலியுறுத்தி “ஆன்மீக அரசியல் அழைப்பு விழா” என்ற பெயரில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ரஜினி ரசிகர்கள் நாளை நடத்தும் போராட்டத்திற்கு போலீசார் அனுமதி வழங்கியுள்ளது.