வீடு வீடாக சென்று பொங்கல் தொகுப்பிற்கான டோக்கன் வழங்கும் பணி தொடங்கியது
பொங்கல் பரிசாக பொதுமக்களுக்கு ரூ.1,000 ரொக்க பணம், ஒரு கிலோ பச்சரிசி, கரும்பு மற்றும் சக்கரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.
பொங்கல் பரிசுத் தொகுப்பு தமிழகம் முழுவதும் உள்ள நியாயவிலைக்கடைகளில் ஜன.9 முதல் 12-ஆம் தேதி வரை வழங்கப்பட உள்ளது. இந்த நிலையில், வீடு வீடாக சென்று பொங்கல் தொகுப்பிற்கான டோக்கன் வழங்கும் பணி தொடங்கியது. இன்று முதல் ஜனவரி 8ஆம் தேதி வரை வீடு வீடாக சென்று பொங்கல் தொகுப்பிற்கான டோக்கன் வழங்கப்பட உள்ளது.