#BREAKING: முதன்முறையாக சட்டமன்ற தேர்தலில் பிரேமலதா விஜயகாந்த் போட்டி..!

Premalatha Vijayakanth has filed a petition today to contest the assembly elections on behalf of Temujin.

தேமுதிக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட  இன்று விருப்ப மனுவை பிரேமலதா விஜயகாந்த் தாக்கல் செய்துள்ளார்.

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை கழகத்தில் பிப்ரவரி 25-ஆம் தேதி முதல் மார்ச் 5-ஆம் தேதி வரை விருப்ப மனுக்களை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தேமுதிக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட முதன்முறையாக விருப்பமனுவை தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தாக்கல் செய்தார்.

இந்த தொகுதியில் போட்டி என குறிப்பிடாமல் விருப்பமனுவை அளித்துள்ளார். ஆனால், பிரேமலதா விஜயகாந்த் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர் ஆகிய  மாவட்டங்களில் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக சார்பாகப் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் வரும் 6-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை நேர்காணல் நடத்த உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.