குடியரசுத்தலைவரின் வருகையை முன்னிட்டு முதுமலை யானைகள் முகாமிற்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் 5ம் தேதி வரை சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.
குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, வரும் 5ம் தேதி பொம்மன் – பெள்ளி தம்பதியை சந்திக்க, முதுமலைக்கு வருகை தர உள்ளார்.‘The Elephant Whisperers’ ஆவண குறும்படம் ஆஸ்கர் வென்ற நிலையில், முதுமலையைச் சேர்ந்தபொம்மன்–பெள்ளிநாடு முழுவதும் பிரபலமாகினர்.
இதனை தொடர்ந்து,ஆஸ்கர் விருது வென்ற பொம்மன் – பெள்ளி தம்பதிக்குகுடியரசு தலைவர், பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் என பலரும் பாராட்டு தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில், குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு பொம்மன் – பெள்ளி தம்பதியை சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
