தமிழக நலனில் பிரதமர் மோடி அதிக அக்கறை செலுத்துகிறார் என அண்ணாமலை பேச்சு.
கோவை அன்னூரில் சிப்காட் தொழில் பூங்கா – நிலம் கையகப்படுத்தும் தமிழக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், திமுக அரசுக்கு எப்பவுமே முன்னாடி கேட் வழியே வந்து பழக்கம் கிடையாது, கொல்லைப்புற வாசல் வழியே தான் வருவார்கள் என விமர்சித்துள்ளார். மேலும், தமிழக நலனில் பிரதமர் மோடி அதிக அக்கறை செலுத்துகிறார். இன்று நடைபெறும் போராட்டம் விவசாயிகளுக்கான போராட்டம் என தெரிவித்துள்ளார்.