மேற்கு வங்க பயணத்தை பிரதமர் மோடி ரத்து செய்தார்.
மேற்கு வங்கத்தில் மேற்கொள்ளவிருந்த தேர்தல் பரப்புரையை பிரதமர் மோடி ரத்து செய்தார். கொரோனா தடுப்பு தொடர்பான உயர்மட்டக்குழு கூட்டம் நடைபெறுவதால் மேற்கு வங்க பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் ஏழு மற்றும் எட்டாம் கட்ட தேர்தலுக்கான பரப்புரையில் மேற்கொள்ள பிரதமர் மோடி இருந்தார். ஆனால், கொரோனா அதிகரித்துள்ளதால் அடுத்தடுத்து ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமரின் பயணம் ரத்து செய்யப்பட்டது.
மேலும், கொரோனா மோசமாக பரவி வரும் நிலையில் மேற்குவங்கத்தில் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்ய கடும் எதிர்ப்பு எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் ராகுல் காந்தி , மம்தா ஆகியோர் தேர்தல் பிரச்சாரங்களை ரத்து செய்துள்ளனர்.
unknown node