அதிமுக அரசின் முயற்சிகளுக்கு பிரதமர் மோடி ஆதரவு அளித்து வருகிறார்- துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்

Prime Minister Modi has been supporting the AIADMK government's efforts - Deputy Chief Minister Panneer Selvam

தமிழகத்துக்கு நலன்தரும் திட்டங்களை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்கு பிரதமர் மோடி சென்னை வந்துள்ளார்.நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார். நேரு உள்விளையாடு அரங்கத்திற்கு காரில் வந்தடைந்த பிரதமர் மோடி ,பின் மேடையில் இருந்த மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர்  மற்றும் ஜெயலலிதா உருவ படத்திற்கு மரியாதை செலுத்தினார்.பின்பு பிரதமருக்கு முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார்கள்.

இதன் பின் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பேசுகையில்,பிரதமர் வருகையால் தமிழகம் சிறப்பு கவனம் பெற்றுள்ளது. தமிழகத்துக்கு நலன்தரும் திட்டங்களை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி.அதிமுக அரசின் முயற்சிகளுக்கு பிரதமர் மோடி ஆதரவு அளித்து வருகிறார்.

சிறந்த முதலீட்டுக்கான தளமாக தமிழகம் மாறி உள்ளது. சிறந்த மாநிலத்துக்கான விருதுகளை தமிழகம் 3 முறை பெற்றுள்ளது. நல் ஆளுமைக்கான மத்திய அரசு விருதை தமிழக அரசு பெற்றுள்ளது.பிரதமர் மோடி போன்ற ஒப்பற்ற தலைவரை காண்பது அரிது என்று பேசினார்.