பிரதமர் மோடி தமிழகம் வருகையால் ட்விட்டரில் பல ஹேஷ்டேக்குகள் டிரெண்டிங்கில் உள்ளது.
பிரதமர் மோடி 2 நாள் பயணமாக இன்று தமிழகம் வருகிறார். பிரதமர் மோடி சென்னை மற்றும் கோவை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையைத் தொடங்கி வைத்து அதன் பின், சென்னை விமான நிலைய புதிய முனையக் கட்டிடத்தை திறந்து வைக்கவுள்ளார்.
பலத்த பாதுகாப்பு :
இதற்காக, சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில், ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பிரதமர் மோடி வருகை காரணமாக சென்னையில் உள்ள பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ட்விட்டர் ஹேஷ்டேக் :
பிரதமர் மோடி வருகை தரும் போது #GoBackModi என்ற ஹேஷ்டேக்கை எதிர்க்கட்சிகள் டிரெண்ட் செய்வது வழக்கம். ஆனால், இந்த முறை #Vanakkam_Modi என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங்கில் உள்ளது. எதிர்க்கட்சிகள் முயற்சித்து #GoBackModi என்ற ஹேஷ்டேக்கை டாப் இடத்தில் கொண்டு வந்தாலும், மீண்டும் பாஜகவினர் வணக்கம்மோடி என்ற ஹேஷ்டேக்கை முதலிடத்துக்கு கொண்டுவந்து விடுகின்றனர்.