புனேவின் கஸ்பா பேத் தொகுதி இடைத்தேர்தலுக்கான 11 வேட்புமனுக்கள் செல்லாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
புனேவின் கஸ்பா பேத் தொகுதியில் இடைத்தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களில் 11 வேட்பு மனுக்கள் செல்லாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. புனேவின் கஸ்பா பேத் மற்றும் சின்ச்வாட் தொகுதியில் இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக கஸ்பா பெத் தொகுதி 29 வேட்பாளர்கள் 39 வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
unknown nodeஇதில் இவர்கள் தாக்கல் செய்த 39 விண்ணப்பங்களில் 11 பேர் வேட்புமனுக்கள் செல்லாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் சின்ச்வாட் தொகுதியில் 40 வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்புமனுவில் 33 வேட்புமனுக்கள் செல்லுபடியாகும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த மனுக்கள், வேட்பாளர்கள் வேட்பு மனுவில் கையொப்பமிடாதது, நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் பிரமாணப் பத்திரங்களை வழங்காதது, கட்சியின் ஏபி படிவத்தை வழங்காதது மற்றும் முன்மொழிபவர்களின் கையொப்பங்கள் போன்ற காரணங்களால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
unknown nodeநிராகரிக்கப்பட்ட படிவங்களை திரும்ப பெறுவதற்கான கடைசி தேதி பிப்ரவரி 10 ஆகும். இதில் மும்முனைப் போட்டியாக சிவசேனா (யுபிடி) ராகுல் கலாத்தேயும் வேட்புமனு தாக்கல் செய்து பாஜகவின் அஷ்வினி ஜக்தாப் மற்றும் என்சிபியின் நானா கேட் ஆகியோரை எதிர்த்து போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.