நேபாளத்தின் புதிய துணை ஜனாதிபதியாக ராம் சகாய பிரசாத் யாதவ் பதவியேற்றுக் கொண்டார்.
நேபாளத்தின் புதிய துணை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ராம் சகாய பிரசாத் யாதவ், குடியரசுத் தலைவர் ஷீத்தல் நிவாஸ் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற சிறப்பு விழாவில் பதவிப் பிரமாணம் செய்து, பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்த பதவியேற்பு விழாவில் குடியரசுத் தலைவர் ராம் சந்திரா பவுடல், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட துணைக் குடியரசுத் தலைவருக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். ராம் சகாய பிரசாத், மார்ச் 17 அன்று நாட்டின் துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ராம் சகாய பிரசாத் யாதவின் இந்த சிறப்பு பதவியேற்பு விழாவில், பிரதமர் புஷ்ப கமல் தஹால் ‘பிரசந்தா’, சபாநாயகர் தேப்ராஜ் கிமிரே, தேசிய சட்டமன்ற தலைவர் கணேஷ் திமில்சினா, முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராம் பரன் யாதவ், முன்னாள் துணை ஜனாதிபதி நந்தா பகதூர் பன், முன்னாள் பிரதமர் ஷேர் பகதூர் தியூபா ஆகியோர் கலந்து கொண்டனர்.