ஊரடங்கில் தளர்வுகள்? – இன்று ஆலோசனை மேற்கொள்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்...!

தமிழகத்தில் செப்.31-ஆம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடையும் நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று நண்பகல் 12:30 மணியளவில் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள

தமிழகத்தில்செப்.31-ஆம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடையும் நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று நண்பகல் 12:30 மணியளவில் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது அந்த வகையில் இதுவரை தமிழகம் முழுவதும் மூன்று மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில்செப்.31-ஆம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடையும் நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று நண்பகல் 12:30 மணியளவில் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது, வார இறுதி நாட்களில் வழிபாட்டு தளங்களை திறப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படவுள்ளதாக  கூறப்படுகிறது.