முதலமைச்சரின் அழுத்தம் காரணமகவே நிலக்கரி சுரங்க ஏலத்தில் டெல்டா பகுதியை மத்திய அரசு நீக்கியது என அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி.
தமிழ்நாட்டில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான தஞ்சையை சுற்றியுள்ள பகுதிகளில் நிலக்கரி எடுக்க ஒன்றிய அரசு திட்டமிட்டிருந்தது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்புகள் எழுந்த நிலையில், அரசியல் தலைவர்கள் மற்றும் விவசாயிகள் தரப்பில் இதற்கு எதிர்ப்பு எழுந்தது.
புதிய நிலக்கரி சுரங்க விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் திமுகவின் மன்னார்குடிஎம் எல்ஏ டிஆர்பி ராஜா மற்றும் அதிமுகவின் அருண்மொழி தேவன் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த நிலையில், மத்திய அரசின் நிலக்கரி சுரங்கங்களுக்கு எக்காரணம் கொண்டும் தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்காது என முதல்வர் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், தற்போது தமிழகத்தில், டெல்டா பகுதியில் நிலக்கரி எடுக்கும் திட்டத்தை கைவிடுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து அமைச்சர் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
அப்போது பேசிய அவர், முதலமைச்சரின் அழுத்தம் காரணமகவே நிலக்கரி சுரங்க ஏலத்தில் டெல்டா பகுதியை மத்திய அரசு நீக்கியது. சட்டப்பேரவையில் முதல்வர் அறிவித்த அறிவிப்பிற்கு கிடைத்த பெரிய வெற்றி. டெல்டா பகுதியில் நிலக்கரி எடுக்கும் திட்டத்தை கைவிட்டதற்காக மத்திய அரசுக்கு பாராட்டுக்கள் என தெரிவித்துள்ளார்.