தமிழ்நாடு பட்ஜெட்: "உங்கள் தொகுதியில் முதலமைச்சர்" திட்டத்தின் கீழ் 2,29,216 மனுக்கள் மீது தீர்வு..!

2,29,216 petitions have been settled under the Chief Minister's scheme in your constituency.

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் 2,29,216 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது.

2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை கலைவாணர் அரங்கில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து வருகிறார். பட்ஜெட் உரையில் பேசிய நிதியமைச்சர், தேர்தல் வாக்குறுதியின் படி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4000 வழங்கப்பட்டுள்ளது.

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் மொத்தம் 4 லட்சத்து 57 ஆயிரத்து 645 மனுக்கள் பெறப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. அனைத்து மனுக்களும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு உரிய சரிபார்த்தலுக்கு பின்னர், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் 2,29,216 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.