புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மதிய உணவு திட்டத்திற்கு ரூ.1,725 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து வருகிறார்.இதில்,கல்விக்கென அதிக அளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.அதேப்போன்று ,காவல்துறை, கிராமப் புற மற்றும் நகர்ப்புற மேம்பாடுகளுக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும்,மீனவர் நலன்,அனைத்து துறைகளிலும் தமிழ் ஆட்சிமொழி போன்ற முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில்,புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மதிய உணவு திட்டத்திற்கு ரூ.1,725 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
அதேபோல,ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்துக்கு ரூ.2356 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.பொது விநியோகத் திட்டத்தில் உணவு மானியத்திற்கான ஒதுக்கீடு 8,437.57 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.