அரசியலுக்கு வந்ததால் ரூ.300 கோடி வருமானம் இழப்பு – கமல்ஹாசன்

Kamal Haasan, chairman of the People's Justice Center, has said that he lost Rs 300 crore in revenue due to entering politics.

அரசியலுக்கு வந்ததால் ரூ.300 கோடி வருமானம் இழப்பு என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் சார்பாக தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் பரப்புரை மேற்கொண்டு வருகிறது. இன்று டெல்டா மாவட்டங்களில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வரும் கமல்ஹாசன், அரசியல் விளையாட்டுக்கு வந்ததால் ரூ.300 கோடி வருமானம் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

ஆனால், அதைப்பற்றி எனக்கு கவலையில்லை என்றும் ஊழல் செய்தவர்கள் ஜெயிலுக்கு சென்றாலும் ஷாப்பிங் செய்யும் அளவிற்கு வசதியாக உள்ளனர் எனவும் விமர்சித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.