கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேமுதிக ரூ.5 கோடிக்கு நிவாரண பொருட்களை வழங்கும் – விஜயகாந்த்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேமுதிக ரூ.5 கோடிக்கு நிவாரண பொருட்களை வழங்கும் என்று விஜயகாந்த் அறிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்துள்ள

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேமுதிக ரூ.5 கோடிக்கு நிவாரண பொருட்களை வழங்கும் என்று விஜயகாந்த் அறிவித்துள்ளார்.இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்துள்ள நிலையில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு தழுவிய ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுறது. மேலும், ஏற்கெனவ பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்கவும், நோய் மேற்கொண்டு பரவுவதை தடுக்கவும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளன.இந்த முடக்கத்தால் ஏற்படும் நெருக்கடியை சமாளிக்க, விருப்பம் உள்ளவர்கள் கொரோனா தடுப்பு பணிக்காக நிதி வழங்கலாம் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார்.எனவே  தனிநபர்கள், அரசியல் கட்சிகள், பிரபலங்கள், தொழில் நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் என பலரும் நன்கொடைகளை வழங்கி வருகின்றனர்.

unknown node

இந்நிலையில்  தேமுதிக நிறுவனத்தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவரது அறிக்கையில்,கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேமுதிக ரூ.5 கோடிக்கு நிவாரண பொருட்களை வழங்கும். ஊரடங்கு முடிந்து மே 3க்கு பின் அனைத்து மாவட்டங்களிலும் நிர்வாகிகள் நிவாரணம் வழங்குவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேமுதிக ரூ.5 கோடிக்கு நிவாரண பொருட்களை வழங்கும் – விஜயகாந்த்