#BREAKING: சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்த உரிமை இல்லை- அமைச்சர் ஜெயக்குமார்..!

The use of the AIADMK flag by someone who has no responsibility in the party is unacceptable. He said Sasikala had no right to use the AIADMK flag.

நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனைக்குப் பின் கடந்த ஜனவரி 27-ம் தேதி சிறையில் இருந்து சசிகலா விடுதலை செய்யப்பட்டார். ஆனால் அதற்கு முன் ஜனவரி 20-ஆம் தேதி பெங்களூர் விக்டோரியா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சசிகலா 11 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

டிஸ்சார்ஜ் ஆன சசிகலா வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சசிகலாவின் சொந்தமான காரில் அதிமுக கொடி பொருத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், 2017 ஆம் ஆண்டிலேயே சசிகலா உள்ளிட்டோர் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டு ஆட்சி நடக்கிறது.

எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றவர்கள் படங்களை பயன்படுத்தவும் சசிகலாவிற்கு தார்மீக உரிமை இல்லை. கட்சியில் எந்த பொறுப்பும் இல்லாத ஒருவர் அதிமுக கொடியை பயன்படுத்துவதை ஏற்கமுடியாது. அதிமுக கொடியை பயன்படுத்த சசிகலாவுக்கு எந்த உரிமையும் கிடையாது என தெரிவித்தார்.