சசிகலாவை சந்திப்பதற்கு அனுமதி கேட்டுள்ளேன் – தினகரன் பேட்டி

Sasikala's health is stable and there is no need to fear,Amma Makkal Munnetra Kazhagam TTV Dinakaran said.

சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது அச்சம் தேவையில்லை என்று  டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

வரும் 27 ஆம் தேதி சிறையில் இருந்து விடுதலையாக உள்ள நிலையில் நேற்று உடல்நலக் குறைவு ஏற்பட்டது.நேற்று மாலை ஏற்பட்ட காய்ச்சல் மற்றும் மூச்சு திணறல் அதிகரித்தது.இதனையடுத்து பெங்களூர் சிவாஜி நகரில் உள்ள பவுரிங் அரசு மருத்துவமனையில் உயர் சிகிச்சைக்காக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் பெங்களுர் சென்ற சசிகலாவின் உறவினரும் ,அமமுக பொதுச்செயலாளருமான தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்பொழுது அவர் கூறுகையில்,சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது .அச்சம் தேவையில்லை.சசிகலாவிற்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.சசிகலாவிற்கு கொரோனா இல்லை என்று உறுதியாகியுள்ளது.சசிகலாவை சந்திப்பதற்கு அனுமதி கேட்டுள்ளேன்.சசிகலாவுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை.எனினும் ஆக்ஸிஜன் அளவு குறைவாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.