சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை இறுதி செய்ய விடுமுறை தேதிகள் அனுப்பிவைப்பு ..!

Details of the state local holiday following the legislative election have been sent to the Election Commission.

சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்ந்து மாநில உள்ளூர் விடுமுறை தேதி விபரங்கள் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் இன்னும் இரண்டு மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் அதற்கான தேர்தல் தேதி இறுதி செய்ய தற்போது தீவிரம் கட்டப்பட்டு வருகிறது. இதனால், சட்டப்பேரவை தேர்தல் தேதியை இறுதி செய்யும் வகையில் மாநில, உள்ளூர் விடுமுறை தேதிகள் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்படுள்ளது என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

சட்டசபை தேர்தல் குறித்து ஆய்வு செய்ய நாளை இந்திய தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா மற்றும் 8 பேர் கொண்ட குழுவினர் தமிழகத்திற்கு வருகை தர உள்ள நிலையில் சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

இந்திய தேர்ல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நாளை மற்றும் நாளை மறுநாள்  அரசியல் கட்சிகளுடன், தமிழக அரசு உயர் அதிகாரிகள் உடன் பாதுகாப்பு மற்றும் தேர்தல் தொடர்பான ஆலோசனை நடத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.