உங்கள் தொகுதியில் ஸ்டாலின் – தர்மபுரியில் நடைபெறும் கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்பு

Stalin in your constituency - Stalin's participation in the meeting in Dharmapuri

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தர்மபுரி மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

தேர்தல் நெருங்கி வருவதால் தமிழகத்தில் உள்ள கட்சிகள் அனைத்தும் தீவிரமாக பரப்புரையை மேற்கொண்டு வருகின்றனர்.அந்த வகையில், அதிமுகவை நிராகரிப்போம் என்ற தலைப்பில் திமுக மக்கள் கிராம சபை கூட்டம் தொடங்கி உள்ளது.கடந்த 10 ஆண்டு காலத்தில் அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு சந்தித்துள்ள அவலங்கள் – சரிவுகள் – தோல்விகளை மக்களுக்கு நினைவூட்டும் வகையில் இது தொடங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதிமுக சார்பில் “வெற்றிநடை போடும் தமிழகம்” என்ற தலைப்பில் தேர்தல் பரப்புரை நடைபெற்று வருகிறது.ஆகவே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜனவரி 28 முதல்“உங்கள் தொகுதியில் ஸ்டாலின்”என்ற புதிய கோணத்தில் திருவண்ணாமலையில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.

இந்நிலையில் இன்று“உங்கள் தொகுதியில் ஸ்டாலின்”என்ற பிரசாரத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தர்மபுரி மாவட்டம், தடங்கம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.