திமுக மக்கள் கிராம சபை கூட்டம் – ராயபுரம் கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்பு

As the DMK People's Grama saba meeting is scheduled to be held in Raipuram today, it has been reported that MK Stalin is to participate in it.

திமுக மக்கள் கிராம சபை கூட்டம் இன்று ராயபுரத்தில் உள்ள நடைபெற உள்ள நிலையில்,இதில் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தல் வெகு விரைவில் நெருங்கிவரும் நிலையில், தற்போது அரசியல் கட்சிகள் தங்களுக்கான தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டன.திமுக சார்பில் அதிமுகவை நிராகரிப்போம் என்ற தலைப்பில் திமுக மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று வடசென்னையில் ராயபுரத்தில் உள்ள ஆண்டிப்ப கிராமணி பகுதியில் திமுக மக்கள் கிராம சபை கூட்டம்  நடைபெற உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மு.க.ஸ்டாலின் பொதுமக்களை சந்தித்து பேச உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.