வேளாண் சட்டத்தை எதிர்த்து போராட்டம் – இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை

The DMK district secretaries are holding a consultative meeting on the issue, which is being held in Delhi against the agricultural law.

வேளாண் சட்டத்தை எதிர்த்து டெல்லியில்  நடத்தி வருகிற நிலையில், இதுகுறித்து திமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

அண்மையில் மத்திய அரசு கொண்டு வந்த வேளாண்சட்டங்களுக்கு ஆதரவு ஒருபுறம் இருந்தாலும் ,மறுபுறம் எதிர்ப்பும் இருந்து வருகிறது.டெல்லியை நோக்கி ‘டெல்லி சாலோ’ என்ற பெயரில் விவசாயிகள் பேரணியை நடத்தினார்கள்.ஆனால் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில்,

பின்பு டெல்லியில் உள்ள புராரி பகுதியில் போராட அனுமதி அளிக்கப்பட்டது.இதனால் நேற்று 7-வது நாளாக விவசாயிகள் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.பஞ்சாப் ,ஹரியானா விவசாயிகளுக்கு ஆதரவாக உத்திர பிரதேச விவசாயிகளும் குவிந்து வருகின்றனர்.

இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ,இன்று  காலை 10:30 மணியளவில், திமுக மாவட்ட செயலாளர்களுடன், காணொலி காட்சி மூலம் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதில் விவசாயிகள் போராட்டம் குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.