பள்ளியில் மாணவர் பலி – சக மாணவர் கைது..!

ஆரணி அரசு மேல்நிலைப்பள்ளியில் இரு மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவர்  உயிரிழப்பு.

ஆரணி அரசு மேல்நிலைப்பள்ளியில் இரு மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவர்  உயிரிழப்பு.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே ஆரணி அரசு மேல்நிலைப்பள்ளியில் இரு மாணவர்களுக்கு இடையே பேனா வாங்குவதில் சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் தமிழ்ச்செல்வன் என்ற மாணவர் காயம் அடைந்துள்ளார்.

இதனையடுத்து மாணவர் தமிழ்ச்செல்வனை பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். இந்த நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயர்ந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இந்த சம்பவத்தில் மாணவனை தாக்கிய சக மாணவரை கைது செய்துள்ளனர்.