காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், 65 வாக்குகள் வித்தியாசத்தில், 1,08,738 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்.
ஈ.வி.கே.எஸ் இளங்கோவன். தந்தை பெரியாரின் பேரனும், திராவிட முன்னேற்ற கழகத்தை தொடங்கும்போது அண்ணாவுக்கு பக்கபலமாக இருந்த சொல்லின் செல்வர் என அழைக்கப்பட்ட ஈ.வி.கே.சம்பத்தின் மூத்த மகன்தான் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்.
1984 ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினரானார்
ஈவிகேஎஸ் இளங்கோவன், பெருந்தலைவர்களின் அடையாளங்களுடன் அரசியலுக்குள் நுழைந்தார். இவர் 1984 ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே ஆண்டு அவர் சத்தியமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு, முதல் முறையாக சட்டப்பேரவைக்குள் நுழைந்தார்.
அதனை தொடர்ந்து, 2004-ம் ஆண்டு கோபிசெட்டிப்பாளையம் மக்களவை தொகுதி எம்.பியாக ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றார். மன்மோகன்சிங் அமைச்சரவையில், மத்திய ஜவுளி மற்றும் வர்த்தகத்துறை அமைச்சராக இருந்தார். அதன்பின், 2009 மற்றும் 2019 மக்களவை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.
திருமகன் ஈவேரா மறைவு
இந்த நிலையில், 2021-ஆம் ஆண்டு, ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவேரா, ஈரோடு கிழக்கு தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில், கடந்த ஜன.4-ஆம் தேதி, திருமகன் ஈவேரா திடீரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
unknown nodeஇந்த நிலையில், திருமகன் ஈவேரா மறைவு, ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தாலும், அரசியலில் புதிய பாதையை நோக்கி பயணிப்பதற்கான வழியையும் ஏற்படுத்தி உள்ளது.
காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன்
அந்த வகையில், ஈவிகேஎஸ் இளங்கோவன், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து, அவருக்கு ஆதரவு அளிக்குமாறு, முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக அமைச்சர்கள், காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
unknown nodeஇந்த நிலையில், கடந்த பிப்.27-ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர், தேமுதிக என நான்கு முனை போட்டி நிலவியது. அன்று 238 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி, இன்று காலை 8 மணி முதல் தொடங்கி நடைபெற்றது.
வெற்றி கனியை பறித்தார் ஈவிகேஎஸ் இளங்கோவன்
இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை, 15 சுற்றுகளாக எண்ணப்பட்டது. அதன்படி, காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், 66 வாக்குகள் வித்தியாசத்தில், 1,09,959 வாக்குகளை பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தென்னரசு 43,553 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா 7984 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் ஆனந்த் 979 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று, வெற்றி கனியை பறித்துள்ள ஈவிகேஎஸ் இளங்கோவன். 34 ஆண்டுகளுக்கு பிறகு சட்டப்பேரவைக்குள் செல்ல உள்ளார்.