#கொரோனா-சுரேஷ் அங்காடிக்கு பிரதமர் மோடி இரங்கல்

கொரோனா பாதிப்பால் உயிரிழந்த மத்திய இணை அமைச்சர் சுரேஷ் அங்காடிக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பால் உயிரிழந்த மத்திய இணை அமைச்சர் சுரேஷ் அங்காடிக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

மத்திய ரெயில்வே இணை மந்திரி சுரேஷ் அங்காடி கொரோனா பாதிப்பு கடந்த 11ம் தேதி  உறுதி செய்யப்பட்டது.இதனால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரெயில்வே இணை மந்திரி சுரேஷ் அங்காடிக்கு  சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.  கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 4வது பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் அங்காடி என்பது குறிப்பிடத்தக்கது.

சுரேஷ் அங்காடி கர்நாடகா மாநிலம் பெலகாவி தொகுதியில் இருந்து 4 முறையாக மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

unknown node

இந்நிலையில் கொரோனா தொற்றால் உயிரிழந்த ரெயில்வே துறை இணை அமைச்சர் சுரேஷ் அங்காடிக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து தனது டுவிட்டர் பதிவில் கூறியதாவது: சுரேஷ் அங்காடி ஒரு அர்ப்பணிப்புமிக்க பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் திறமையான அமைச்சராக இருந்தார். அவர் கர்நாடகாவில் கட்சியை பலப்படுத்த கடுமையாக உழைத்தவர். திறமையான அமைச்சராக இருந்த அவரின் மறைவு வருத்தமளிக்கிறது என்று  மோடி பதிவிட்டுள்ளார்.