தேசிய பாஜக தலைவர் நட்டாவை சந்தித்த தமிழக பாஜக தலைவர் முருகன்

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்தார்

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்தார்

அண்மையில் பாஜகவின் புதிய தேசிய நிர்வாகிகள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் ஜே.பி நாட்டா வெளியிட்டார்.  அந்த பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த யாரும் இடம்பெறவில்லை. 12 துணைத் தலைவர்கள், 8 பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டது.

குறிப்பாக பாஜகவின் தேசிய செயலாளர் பதவியில் இருந்த ஹெச்.ராஜா பெயர் இடம் பெறவில்லை. செய்தி தொடர்பாளர் பட்டியலில் கூட தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பாஜக நிர்வாகிகள் கூடஇடம்பெறவில்லை.அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில்  இந்த பட்டியல் காரணமாக  தமிழக பாஜகவில் சற்று அதிருப்தி நிலவி வந்தது.

இதனிடையே  டெல்லியில் தேசிய பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவை தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் நேரில் சந்தித்துள்ளார் . தேசிய நிர்வாகிகளின் பட்டியலில் தமிழக பாஜகவினர் இடம்பெறாதது குறித்து ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.