அமித்ஷாவை வரவேற்க தமிழக முதல்வர் ,துணை முதல்வர் விமான நிலையம் வருகை

Tamil Nadu Chief Minister Palaniachchi and Deputy Chief Minister Panneer Selvam have arrived at the Chennai airport to welcome Union Home Minister Amit Shah.

மத்திய அமைச்சர் அமித்ஷாவை வரவேற்க தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் சென்னை விமான நிலையம் வந்துள்ளனர்.

மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக முன்னாள் தேசியத் தலைவருமான அமித்ஷா 2 நாள் பயணமாக இன்று தமிழகம் வருகிறார். தமிழகத்தில் மெட்ரோ ரயில் திட்டம், உயர்மட்ட சாலை திட்டம்,சென்னை வர்த்தக மையம் விரிவுபடுத்தும் திட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட சென்னை வருகிறார்.

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை வரவேற்க தமிழக முதல்வர்  பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் சென்னை விமான நிலையம் வந்துள்ளனர்.ஆகவே ,விமானநிலையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.அமித்ஷாவை வரவேற்க அமைச்சர்கள் ஜெயக்குமார், வேலுமணி , தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், பொன் ராதாகிருஷ்ணன்,ஹெச்.ராஜா உள்ளிட்டோரும்விமானநிலையம்வந்துள்ளனர்.