சென்னை தலைமைச்செயலகத்தில், ஜாக்டோ ஜியோ சங்கத்தினருடன் தமிழ்நாடு அரசு பேச்சுவார்த்தை
அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஏப்ரல் 11-ம் தேதி தலைமைச் செயலக முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என ஜாக்டோ ஜியோ அமைப்பு அறிவித்துள்ளது.
அதன்படி, ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள்-பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஏப்ரல் 11ல் தலைமைச் செயலக முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளது.
இந்த நிலையில், சென்னை தலைமைச்செயலகத்தில், ஜாக்டோ ஜியோ சங்கத்தினருடன் தமிழ்நாடு அரசு பேச்சுவார்த்தை நடத்துகிறது. இந்த பேச்சுவார்த்தையில், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ஏ.வ.வேலு மற்றும் அன்பில் மகேஷ் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.