பிரதமர் மோடியை சந்தித்தார் தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!

டெல்லியில் பிரதமர் மோடியுடன் அமைச்சர் உதயநிதி சந்திப்பு.

டெல்லியில் பிரதமர் மோடியுடன் அமைச்சர் உதயநிதி சந்திப்பு.

டெல்லி பயணம் :

டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் நரேந்திரமோடியை தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்துள்ளார். தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். அங்கு நடைபெற்ற பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இல்ல விழாவில் கலந்து கொண்டார்.

மோடியுடன் சந்திப்பு :

இதனையடுத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகிய நிலையில் தற்பொழுது பிரதமர் இல்லத்தில் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார். பிரதமரை சந்தித்த உதயநிதி தனது துறை தொடர்பான பல்வேறு அம்சங்களை பற்றி ஆலோசித்தித்து வருகிறார். உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்ற பின் முதல்முறையாக பிரதமர் மோடியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.