"வெற்றிநடைபோடும் தமிழகம் " – இன்று முதல் முதலமைச்சர் பழனிசாமி பரப்புரை

Chief Minister Palanisamy will start his election campaign from Namakkal today under the theme 'Tamil Nadu with victory'.

வெற்றிநடைபோடும் தமிழகம் என்ற தலைப்பில் தேர்தல் பிரச்சாரத்தை இன்று நாமக்கல்லில் இருந்து தொடங்குகிறார் முதல்வர் பழனிசாமி.

2021 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தல் வெகு விரைவில் நெருங்கிவரும் நிலையில், தற்போது அரசியல் கட்சிகள் தங்களுக்கான தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டன.திமுக ,மக்கள் நீதி மைய்யம் உள்ளிட்ட கட்சிகள் ஏற்கனவே பிரச்சாரத்தை தொடங்கி விட்டன.

இதற்கு இடையில் ரஜினியும் ஜனவரி மாதம் கட்சி துவங்குவதாக அறிவித்துள்ளார்.விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த சட்டமன்ற தேர்தல் குறித்துவெற்றிநடை போடும் தமிழகம்’ என்ற பெயரில் இன்று முதலமைச்சர் பழனிசாமிதேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இன்றுமுதல் 31ஆம் தேதி நாமக்கல், திருச்சி மாவட்டங்களில் பரப்புரை மேற்கொள்ள உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்அரசின் சாதனைகளை “ரிப்போர்ட் கார்டு” வடிவில் மக்கள் இடத்தில் கொண்டு சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.