எடப்பாடி பழனிசாமி அவர்கள், அதிமுகவுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை
கடந்த பிப்.27-ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர், தேமுதிக என நான்கு முனை போட்டி நிலவியது. இந்த நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி, இன்று காலை 8 மணி முதல் தொடங்கி நடைபெற்றது.
இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை, 15 சுற்றுகளாக எண்ணப்பட்டது. தற்போது தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், 66 வாக்குகள் வித்தியாசத்தில், 1,09,959 வாக்குகளை பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தென்னரசு 43,553 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா 7984 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் ஆனந்த் 979 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
இந்த நிலையில், எதிர்கட்சி தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி அவர்கள், அதிமுகவுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், ஜனநாயக படுகொலையை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களத்திலும் திமுக அரங்கேற்றியது. திருமங்கலம் ஃபார்முலா என்கிற பெயரில் மக்கள் வாக்குகளை விலை பேசியது போல, ஈரோடு கிழக்கு பார்முலா என்று ஒன்றை உருவாக்கி ஆடு மாடுகளை அடைப்பது போல் வாக்காளர்கள் அடைத்து வைத்து அருவருக்கத்தக்க ஜனநாயக படுகொலையை அடங்கி இருக்கிறது.
ஆளும் திமுகவால் அள்ளி இறைக்கப்பட்ட பணம், மது, உணவு, கொலுசு, குக்கர் உள்ளிட்ட பரிசு பொருட்கள் என எல்லாவற்றையும் தாண்டி திமுகவின் மிரட்டல் அப்பாவி மக்களை பெரும்பளவில் அச்சுறுத்தியது என குற்றம் சாட்டியுள்ளார்.
unknown node