#BREAKING: தமிழகத்தில் பரப்புரை ஓய்ந்தது..!

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல் பிரசாரம் நிறைவடைந்தது.

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல் பிரசாரம் நிறைவடைந்தது.

தமிழகத்தில் நாளை மறுநாள் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதை தொடர்ந்து இந்த சட்டப் பேரவைக்கான பரப்புரை செய்ய இன்றே கடைசி நாள் என தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. முதலில் இன்று மாலை 5 மணி வரை தேர்தல் பரப்புரை மட்டுமே அனுமத்தி வழங்கப்பட்டது.

பின்னர், 2 மணி நேரம் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. இதனால், இரவு ஏழு மணி உடன் அனைத்து கட்சிகளும் தங்களது தேர்தல் பரப்புரையை நிறுத்திக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில்,  தமிழகத்தில் 7 மணியுடன் தேர்தல் பரப்புரை நிறைவடைந்தது. பிரச்சாரம் ஓய்ந்தது தொடர்ந்து தொகுதிக்கு சம்பந்தமில்லாதவர்கள் வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்டவையில் பிரச்சாரம் செய்யக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.