தமிழகத்தில் கல்விமுறையை மாற்ற வேண்டும் – ஆளுநர் ஆர்.என்.ரவி

Governor RN Ravi's speech at the Vice-Chancellors' Conference said that the education system should be changed according to the age of the youth.

RN RAVI

கல்வி முறையை இளைஞர்களின் திறன் காலத்திற்கு ஏற்ப மாற்ற வேண்டும் என துணைவேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு.

உதகை ராஜ்பவனில் தமிழ்நாடு மாநில, தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு தமிழக ஆளுநர் ஆர்என் ரவி தலைமையில் நடைபெற்று வருகிறது. பல்கலைக்கழக துணைவேந்தர்களின் 2 நாள் மாநாட்டை ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார். தேசிய கீதம், தமிழ்தாய் வாழ்த்து மற்றும் பாரதியார் பாடலுடன் துணைவேந்தர்கள் மாநாடு தொடங்கியது.

இந்த நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழகத்தில் கல்விமுறையை  மாற்ற வேண்டும். கல்வி முறையை இளைஞர்களின் திறன் காலத்திற்கு ஏற்ப மாற்ற வேண்டும். பிற மாநிலங்கள் தமிழகத்துடன் போட்டி போடும் அளவிற்கு முன்னேறியுள்ளன என தெரிவித்துள்ளார்.