இனிப்பும் கசப்பும் கலந்த கலவையாக மத்திய பட்ஜெட் உள்ளது – விஜயகாந்த்

மத்திய பட்ஜெட்டில் பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றிருந்தாலும், ஏழை, எளிய மக்களின் வளர்ச்சிக்கான எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. எனவே இனிப்பும்

மத்திய பட்ஜெட்டில் பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றிருந்தாலும், ஏழை, எளிய மக்களின் வளர்ச்சிக்கான எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. எனவே இனிப்பும் கசப்பும் கலந்த கலவையாக மத்திய பட்ஜெட் உள்ளது என விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள், 2022-23-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் தாக்கல் குறித்து அரசியல் பிரபலங்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், ‘மத்திய பட்ஜெட்டில் பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றிருந்தாலும், ஏழை, எளிய மக்களின் வளர்ச்சிக்கான எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. எனவே இனிப்பும் கசப்பும் கலந்த கலவையாக மத்திய பட்ஜெட் உள்ளது.’ என  தெரிவித்துள்ளார்.

unknown node