இறுதி வாக்காளர் பட்டியல் -இன்று வெளியாகிறது

As the election approaches in tamilnadu ,The final voter list for Tamil Nadu is to be released today by election commission

தமிழகத்தில் இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது.இதற்காக தமிழகத்தில் உள்ள கட்சிகள் தயாராகி வருகின்றது.தேர்தல் நெருங்கும் நிலையில்மாவட்ட தேர்தல் அலுவலர்களுடன்தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தொடர்ச்சியாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

ஆகவே ஜனவரி 20-ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தமிழக தேர்தல் ஆணையம் ஏற்கனவே தெரிவித்தது.கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெற்றன.அதன்படி இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. புதிய வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டைகள் தேசிய வாக்காளர் தினத்தில் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.