பிப்ரவரி 2 ஆம் தேதிமுதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடுகிறது

The first session of the Tamil Nadu Legislative Assembly this year would commence with the customary Governor's address in Kalaivanar Arangam

இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் பிப்ரவரி 2 ஆம் தேதி ஆளுநர் உரையுடன், சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாகசட்டப்பேரவைசெயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இந்திய அரசமைப்பு, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் கூட்டத்தைபிப்ரவரி 2 ஆம் தேதி, காலை 11.00 மணிக்கு  கலைவாணர் அரங்கம், மூன்றாவது தளத்தில் உள்ள பல்வகை கூட்டாங்கத்தில் கூட்ட இருக்கிறார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், ஆளுநர் உரையுடன்சட்டப்பேரவைதொடங்கும் என்று தெரிவித்துள்ளார்.