#Breaking:சத்துணவு திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு இவைகளெல்லாம் வழங்கப்படும்...!

The government order to provide 10 eggs with dry items including rice and pulses under the nutritional program to students studying from class 1 to class 8.

தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சத்துணவு திட்டத்தின் கீழ் அரிசி,பருப்பு உள்ளிட்ட உலர் பொருட்களுடன் 10 முட்டைகளை வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸின் இரண்டாம் அலை பரவலானது அதிகரித்ததை தொடர்ந்து,கொரோனா பரவலை கட்டுபடுத்த தளர்வுகளற்ற ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக,மாணவர்கள் வீட்டிலிருந்து ஆன்லைன் மூலம் பாடம் பயின்று வருகின்றனர்.இதனால்,அரசு பள்ளிகளில் சத்துணவு திட்டத்தின் மூலம் பயனடைந்து வந்த 34 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும்,அரசுப்பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சத்துணவு திட்டத்தின் கீழ் அரிசி,பருப்பு உள்ளிட்ட உலர் பொருட்களுடன் 10 முட்டைகளையும் சேர்த்து வழங்க கடந்த ஆண்டே உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில்,தற்போதைய நடப்பு ஆண்டில் கல்வி பயிலும் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் சத்துணவு திட்டத்தின் கீழ் அரிசி,பருப்பு உள்ளிட்ட உலர் பொருட்களுடன் 10 முட்டைகளையும் சேர்த்து வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

unknown node
#Breaking:சத்துணவு திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு இவைகளெல்லாம் வழங்கப்படும்...!